காங். ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டம் ரத்து: பிரியங்கா காந்தி அறிவிப்பு

லக்னோ: ‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்,’ என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், சகரான்பூரில் காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கலந்து கொண்டார். விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து நடந்த பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி, ‘‘பிரதமர் மோடியும், பாஜ தலைவர்களும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை அவமதிக்கின்றனர். மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகள் மீது ஆதிக்கம் செலுத்தும் சட்டங்களாகும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்வந்தால் இந்த புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும். இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் தொடர்ந்து போராடும்,” என்றார்.

Related Stories: