மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் பெல்ஜியம் வீராங்கனை கிரீட் மின்னனுடன் நேற்று மோதிய குவித்தோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஹாலெப் (ரோமானியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.