மஞ்சள்படை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: குழாயடி சண்டை ஸ்டார்ட்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராம ஊராட்சிக்குட்பட்ட புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கடந்த 1ம் தேதி மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பிறந்தநாளை முன்னிட்டு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது மகன் கனலரசன் தலைமையில் செயல்படும் மஞ்சள்படை நிறுவனத்தின் சார்பில், அப்பகுதியில் கொடியேற்று விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக 3 அடி பீடத்துடன் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, அனுமதி வேண்டி ராஜேந்திரன், வார்டு கவுன்சிலர் அலமேலுமுருகன் உள்ளிட்டோர், ஆத்தூர் காவல்நிலையத்தில் மனு கொடுத்தனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். அதேவேளையில், கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு சேலம் கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், திடீரென அங்கு திரண்ட பாமகவினர், போலீசார் முன்னிலையிலேயே கொடிக்கம்பத்தை அடித்து உடைத்ததோடு, பீடத்தையும் சேதப்படுத்தினர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். போலீசாரின் துணையோடு கம்பம் உடைக்கப்பட்ட செய்தியறிந்த மஞ்சள்படை நிறுவனத்தலைவர் கனலரசன் மற்றும் நிர்வாகிகள், கொடியேற்று நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

Related Stories: