கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.50 லட்சம் குட்கா பறிமுதல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சாத்தாங்காடு ஸ்டீல் யார்டில் 2 நாட்களாக சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பூட்டை உடைத்து போலீசார் சோதனை செய்தபோது ரூ.50 லட்சம் மதிப்புள்ள 10 டன் குட்கா இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து, லாரி டிரைவர் கொருக்குப்பேட்டையை சேர்ந்த கோவிந்தனை (38) செய்து, விசாரித்து வருகின்றனர். கஞ்சா கடத்திய பெண்கள் கைது :ஆந்திராவில் இருந்து கோயம்பேடு வழியாக கடலூருக்கு அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி (60), வெண்ணிலா (25) ஆகியோரை போலீசார் கைது செய்து, 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: