ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடப்பதால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும்: வெங்கடேசன் எம்.பி. கடிதம்

மதுரை: ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடப்பதால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். மே 13, 15-ம் தேதிகளில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது என தேர்வு தேதிகளை சுட்டிக்காட்டி மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் சிபிஎஸ்இ இயக்குனருக்கு வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.  

தமிழக அரசும் மத்திய அரசும் இந்த ஆண்டு மே 14-ம் தேதி ரம்ஜான் விடுமுறை அறிவித்துள்ளது. ஆனால் பிறை தென்படுவதை பொறுத்தே ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ ரமலான் பண்டிகை மாற வாய்ப்புள்ளது. ஆனால் பிறை தென்படுவதை கணக்கில் கொள்ளாமல் மே 13, 15-ம் தேதிகளில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என வெங்கடேசன் எம்.பி, தெரிவித்துள்ளார்.

ரமலான் தேதி மாறும் பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என வெங்கடேசன் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இஸ்லாமிய மாணவர்களை முக்கிய திருநாளன்று தேர்வெழுத நிர்பந்திப்பது சி.பி.எஸ்.இ.க்கு அழகல்ல என அவர் கூறியுள்ளார். முன்னதாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4 முதல் ஜூன் 11 வரையிலும் தேர்வு நடைபெறவிருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: