தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதி விண்ணப்பத்தை திரும்ப பெற்றது பைசர்: கூடுதல் தகவல்கள் கேட்டதால் முடிவு

புதுடெல்லி: அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து, ‘பைசர்’ என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு முதலில் இங்கிலாந்து அனுமதி அளித்தது. பின்னர், அமெரிக்காவிலும் இந்த மருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இந்தியாவிலும் இந்த மருந்தை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி கோரி, கடந்த டிசம்பரில் பைசர் நிறுவனம் விண்ணப்பம் செய்தது. இந்தியாவில் கோவிஷீல்டு, ேகாவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் முன்பாகவே, இந்த அனுமதி கேட்டு பைசர் விண்ணப்பித்தது.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி நடந்த இந்திய மருந்து ஒழுங்கு முறை ஆணையத்தின் கூட்டத்தில், பைசர் நிறுவனமும் பங்கேற்றது. கூட்டத்துக்கு பிறகு, தனது தடுப்பூசிக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திரும்ப பெறுவதாக அது திடீரென அறிவித்தது. கூட்டத்தில் பங்கேற்ற நிபுணர்கள், இந்த தடுப்பூசி பற்றி கூடுதல் தகவல்கள் கேட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பைசர் தெரிவித்துள்ளது. அதே நேரம், கூடுதல் தகவல்களுடன் விரைவில் மீண்டும் விண்ணப்பம் செய்யப்படும் என்று தெரிவித்தது.

Related Stories: