25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: முடிவுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

குடகு: குடகு மாவட்டத்தில் பியூ கல்லூரி மாணவர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடகு மாவட்டம் கராகந்தூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் 25 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 மாணவர்கள் மடிக்கேரியில் உள்ள மாவட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் மட்டும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களை தொடர்ந்து 22 ஊழியர்கள் உள்பட சுமார் 76 மாணவர்கள் சோதனை முடிவுக்கு காத்திருக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த 21-ம் தேதி மாணவர் ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கல்லூரியில் இருந்து சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பறிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக கல்லூரியில் உள்ள மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஹாஸ்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவரும் நலமாக உள்ளனர். தொடர்ந்து இன்னும் பல மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். சிலருக்கு அறிகுறி உள்ளது. மற்றவர்கள் அறிகுறியின்றி தொற்று பாதித்திருப்பது தெரியவந்துள்ளது  என தெரிவித்தார். தொடர்ந்து கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் சென்று தூய்மைப்பணிகளை ஆய்வு செய்து மாணவர்களின் நலம் குறித்து விசாரித்தனர்.

Related Stories: