கேரளாவில் ரயில் மறியல், பேரணி

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தால் நேற்று வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி மற்றும் கல்வீச்சு ஆகியவை நடந்தன. இதில் ஒரு விவசாயி பரிதாபமாக இறந்தார். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கேரளாவிலும் நேற்று பல்வேறு இடங்களில் காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்தன. காங்கிரஸ் எம்எல்ஏ ஷாபி பறம்பில் தலைமையில் பாலக்காட்டில் ரயில் மறியல் மற்றும் சைக்கிள் பேரணி நடந்தது. பாலக்காடு ரயில் நிலையத்தில் மங்களூர்- சென்னை ரயிலை மறித்து போராட்டம் நடந்தது.  மேலும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரம் கவர்னர் மாளிகையை நோக்கி கண்டனப் பேரணி நடந்தது.  கவர்னர் மாளிகைக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். மேலும் கொச்சியிலும் காங்கிரசார் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டி பேரணி நடத்தினர்.

Related Stories:

>