நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் அமைச்சரவையில் எந்த அதிருப்தியும் கிடையாது

பெங்களூரு: அமைச்சரவையில் எந்த அதிருப்தியும் கிடையாது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் தெரிவித்தார்.  பெங்களூரு விதானசவுதாவில் தனது அலுவலகத்துக்கு சிறப்பு பூஜை நடத்திய அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாநில முதல்வர் எடியூரப்பா என் மீது நம்பிக்கை வைத்து நகர நிர்வாகம் துறை வழங்கியுள்ளார். இதில் சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பான முறையில் நிர்வாகம் செய்யப்படும். அதே போல் பெங்களூரு ஊரக மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவி வழங்கினால் அதிலும் சிறப்பாக செயல்படுவேன்.வீட்டுவசதி துறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது உண்மை தான். ஆனால் சில காரணங்களால் அந்த துறையை முதல்வர் எடியூரப்பாவால் வழங்க முடியவில்லை. கலால் துறை வழங்கிய போது வருத்தம் ஏற்பட்டது. இதனால் அதை வேண்டாம் என்று தெரிவித்தேன். இதனால் முதல்வர் நகர நிர்வாகம் துறை வழங்கினார். இதனால் தற்போது அலுவலகத்துக்கு பூஜை செய்து பணிகள் ெதாடங்கப்பட்டுள்ளது.

இந்த துறை வழங்கியதற்கு சமாதானம் ஏற்பட்டுள்ளதுடன் சிறப்பாக செயல்படுவேன். அதே போல் இந்த துறையின் மூலம் அரசு, கட்சிக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் பணி புரிவேன். கட்சி முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம். நான் ஒசகோட்டை தொகுதியை சேர்ந்தவன். மூன்று முறை அந்த தொகுதியில் வெற்றிபெற்றவன். பெங்களூரு ஊரக மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவி வழங்க கோரி முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது ஆனால் முதல்வர் இறுதி முடிவு எடுப்பார். அமைச்சர் பதவி கிடைக்காத காரணத்தால் எச். விஷ்வநாதுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் முதல்வர் எடியூரப்பா அதை சரி செய்வார். எங்களுடைய அமைச்சரவையில் எந்த அதிருப்தியும் கிடையாது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றார்.

Related Stories: