விவசாயிகள் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் காங்கிரஸ்: வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல் குற்றச்சாட்டு

பெங்களூரு: விவசாயிகள் விஷயத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போட்டு வருகிறது என்று வேளாண் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவித்தார்.  பெங்களூருவில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.சி.பாட்டீல் கூறியதாவது,மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதா விவசாயிகளுக்கு ஆதரவாகவுள்ளது. அதே போல் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. புதிய சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் காங்கிரஸ் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போட்டு விவசாயிகளை திசைத்திருப்பி வருகிறது. 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் ஏ.பி.எம்.சியை ரத்து செய்யும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது அதை மறந்து பேசி வருகின்றனர். பா.ஜ. அரசு ஏ.பி.எம்.சியை ரத்து செய்யவில்லை.

அதே போல் விவசாயிகள் தங்களின் பொருட்களை எங்கு வேண்டுமனாலும் விற்பனை செய்து கொள்ள அவகாசம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதில் நஷ்டம் வியாபாரிகளுக்கு தானே தவிர விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. எந்த காரணத்துக்கும் ஏ.பி.எம்.சி. ரத்து செய்ய மாட்டாது.  விவசாயிகளுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இதை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: