சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் எனக்கூறுவது வருத்தம் அளிக்கிறது. சசிகலாவினால் அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள். யாருக்கு எவ்வளவு தொகுதி என்பதை கூட்டணிக்கான தலைமை பேச வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தான் பேச்சுவார்த்தை எனக் கூறுவது தாமதத்திற்கு வழிவகுத்துவிடும் எனவும் கூறினார்.

Related Stories:

>