ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக இடைகாலமாக திறக்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை.: உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக இடைகாலமாக திறக்க உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம், துப்பாக்கி சூடு போன்றவற்றால் பெரும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று  உத்தரவிட்டனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவு செல்லும் என ஐகோர்ட் தெரிவித்து இருந்தது.

இதனைத்தொடர்ந்து ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால், வேதாந்தா நிறுவனம் தப்பில் ஆலையை பராமரிப்பு பணிக்காக இடைகாலமாக திறக்க உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. மேலும் வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் ஆலை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வேதாந்தா நிறுவன கோரிக்கைகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக இடைகாலமாக திறக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: