பாரத் பயோடெக் அறிவிப்பு கோவாக்சின் தடுப்பூசியை தவிர்க்க வேண்டியது யார்?

புதுடெல்லி: நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், ஒவ்வாமை இருப்பவர்கள் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் கூறி உள்ளது. இந்தியாவில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், 580 பேருக்கு லேசான பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், யாரெல்லாம் தடுப்பூசியை தவிர்க்க வேண்டுமென பாரத் பயோடெக் நிறுவனம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள், காய்ச்சல், சீரற்ற மாதவிடாய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், உடல் சம்மந்தப்பட்ட தீவிர பிரச்னை இருப்பவர்கள் கோவாக்சினை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பிற கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் கோவாக்சினை எடுத்துக் கொள்ளக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

* 30 நிமிடம் கழித்து செல்ல வேண்டும்

ஒவ்வாமை இருப்பவர்களுக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டதும் வலி, அரிப்பு, தலைவலி, காய்ச்சல், சோர்வு, தடுப்புகள், வாந்தி போன்றவை ஏற்படலாம். எனவே, தடுப்பூசி போட்ட பிறகு 30 நிமிடங்கள் காத்திருந்து விட்டு தடுப்பூசி மையத்தில் இருந்து வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: