சோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக மோடி தேர்வு

அகமதாபாத்: குஜராத்தின் பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குஜராத் முன்னாள் முதல்வர் கேஷூபாய் படேல் அறக்கட்டளை தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்தார். அவர் மறைவுக்குப் பிறகு தலைவர் பதவி காலியாக இருந்தது. இதில் அறக்கட்டளை உறுப்பினராக இருந்த பிரதமர் மோடியை தலைவராக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.  வீடியோ கான்பரன்ஸ் மூலம் அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்று நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில், பாஜ மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத்தை சேர்ந்த சமூக சேவகர் பர்மர், தொழிலதிபர் ஹர்ஷவர்தன் நியோதியா ஆகியோர் உள்ளனர்.

Related Stories:

>