நகர உள்ளாட்சி ஊழியர்களுக்கும் ஜோதி சஞ்சீவினி திட்டம் விஸ்திரிக்க வேண்டும்: அமைச்சர் ஆலோசனை

பெங்களூரு: ஜோதி சஞ்சீவினி திட்டம் தொடர்பாக பெங்களூருவில் உள்ளாட்சி, தோட்டக்கலை மற்றும் பட்டுவளர்ச்சி அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு துப்புரவு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ரூ. 3500 சிறப்பு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை ரூ. 7500 ஆக உயர்த்த வேண்டும். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 30 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதை பிற தொற்று நோய் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கும் விஸ்தரிக்க பரிசீலிக்கப்படும். ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து தொடர்பாக 2017ன் முன் தகுதிக்கேற்ப அமல்படுத்த வேண்டும்.

அல்லது, தினக்கூலி தொழிலாளர்கள் நல வளர்ச்சி வாரியத்தில் திருத்தம் செய்து டிபிஏஆர், டிபிஏஎல் மற்றும் நிதித்துறை ஆலோசனை பெற்று ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். ஜோதி சஞ்சீவினி திட்டத்தை துப்புரவு தொழிலாளர்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கேஜிஐடி மற்றும் ஜிபிஎப் சலுகைகள் வழங்குவது அல்லது மாற்று ஏற்பாடு செய்ய 15 நாட்களுக்கு அறிக்கை கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பணியில் இருக்கும் துப்புரவு பணியாளர்கள் இறந்தால் அவரது இறுதி சடங்கிற்கு ரூ.7500 வழங்கப்பட்டு வருகிறது. இதை இரட்டிப்பாக்க பரிசீலிக்கப்படும் என்றார்.

Related Stories: