3ம் கட்ட விரிவாக்கம் கர்நாடகாவில் மேலும் 7 அமைச்சர்கள் பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் பாஜ ஆட்சியின் மூன்றாவது கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு நேற்று நடந்தது. இதில், புதிதாக 7 பேர் பதவியேற்றனர். கர்நாடகாவில் கடந்தாண்டு ஜூலையில் எச்.டி.குமாரசாமி தலைமையில் செயல்பட்ட  மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதையடுத்து, பாஜ ஆட்சி அமைத்தது. முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார். 26 நாட்களுக்குப்பிறகு கடந்த 2019 ஆகஸ்ட் 20ம் தேதி முதல் கட்டமாக அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. இதில் 17 பேர் பதவியேற்றனர். இரண்டாவது கட்ட விரிவாக்கம், கடந்தாண்டு பிப்ரவரி 5ல் நடந்தது.

இதில், 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். 6 இடம் காலியாக இருந்தது. இடையில், கடந்தாண்டு சி.டி.ரவி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததின் மூலம் காலியிடம் 7 ஆக உயர்ந்தது. இந்நிலையில், அமைச்சரவையை மேலும் விரிவுப்படுத்துவதற்கு பாஜ மேலிடம் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. அதன்படி, நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், 7 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் வி.ஆர்.வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

Related Stories: