சட்டப் படிப்புக்கு நுழைவு தேர்வா? அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: சட்டப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய பார்கவுன்சில் அறிவித்து இருப்பதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய பாஜ அரசு, தற்போது சட்டக் கல்வியிலும் சமூக நீதியை ஒழிக்க முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. முதுகலை சட்டப் படிப்புக்கு இனிமேல் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும். முதுநிலை சட்டப் படிப்பு எல்.எல்.எம். என்பது இரண்டு ஆண்டு படிப்பாக்கி, ஓராண்டு படிப்பு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் அறிவித்து இருக்கிறது.சமூக நீதிக் கோட்பாட்டின் ஆணி வேரையே அறுத்தெறிய துடிக்கும் பாஜ அரசின் இத்தகைய செயல் கண்டனத்துக்கு உரியதாகும்.கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜ அரசு, முதுநிலை சட்டப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே இந்திய பார் கவுன்சில் தனது அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.

Related Stories: