சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை பெற போலியாக பெயர்கள் சேர்ப்பு: மறு ஆய்வுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வேலூர்: நாடு முழுவதும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த கல்வியாண்டில் ஒரு சில மாநிலங்களில் சிறுபான்மையினர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் சார்பாக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், தனியார் இணையவழிச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர்.  அதற்காக தங்களுக்கென பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்ட யூசர் நெம்பர் மற்றும் பாஸ்வேர்டை அந்த இன்டர்நெட் மைய நிர்வாகிகளுக்கு கொடுத்துள்ளனர். இதனால் அத்தனியார் மைய நிர்வாகிகளில் ஒரு சிலர் அதை தவறாகப் பயன்படுத்தி மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை ஆன்லைன் மூலம் தேசிய உதவித்தொகை திட்டத்தில் சேர்த்து ஒரே வங்கிக்கணக்கு எண்களை கொடுத்து பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்தப்பட்டது. அதன்படி அனைத்து தலைமையாசிரியர்களும் மறு ஆய்வு செய்து சான்றளிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: