தமிழகத்தில் அரியலூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை: சத்யபிரதா சாஹூ

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சோதனைகள் நிறைவடைந்து என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதையொட்டி, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியலை அடுத்த மாதம் 20ம் தேதி வெளியிடுவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.

விரைவில், இரண்டாவது கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடுத்த வாரம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் வைத்துள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடைபெற்றது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; அரியலூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நிறைவடைந்தது. மற்ற மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: