குடிக்க பணம் தர மறுப்பு பாட்டியை கொன்ற பேரன் கைது

சிக்கபள்ளாபூர்: குடிக்க பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்த பாட்டியை கல்லால் தாக்கி கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர். சிக்கபள்ளாபூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா காதலவேனி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (28). இவர் தினமும் போதையில் வீட்டுக்கு வந்து குடும்ப உறுப்பினர்களிடம் தகராறு செய்து வந்தார்.அதே போல் பாட்டியிடமும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை போதையில் வீட்டுக்கு வந்த நரசிம்மமூர்த்தி பாட்டியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்த நரசிம்மமூர்த்தி பாட்டியை கல்லால் தாக்கி கொலை செய்தார். இது குறித்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் எஸ்.ரவி. சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பேரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: