ப.சிதம்பரம் கண்டனம்: திமுக மக்கள் சபை கூட்டங்களில் செயற்கை சர்ச்சையை உருவாக்குவதா?

புதுக்கோட்டை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் புதுக்கோட்டையில்  அளித்த பேட்டி: தமிழக முதலமைச்சரும் மக்களை சந்தித்து வருகிறார். அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மக்களை சந்தித்து வருகிறார். திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் செயற்கையாக சர்ச்சையை உருவாக்குகின்றனர். வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். டெல்லியில் 39 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 40 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அரசு தனது பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. பண மதிப்பிழப்பு தொடங்கி ஜிஎஸ்டி வரை, சீன ஊடுருவல் தொடங்கி விவசாயிகள் போராட்டம் வரை மத்திய அரசு பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வது இல்லை.

தற்போதைய மத்திய அரசுக்கு மக்கள் சொல்வதும் பொருட்டில்லை. நாடாளுமன்றமும் பொருட்டில்லை. நாடாளுமன்ற வாக்குப்பதிவும் பொருட்டல்ல. முரட்டுத்தனமான இயந்திரமாக பாஜக அரசு செயல்படுகிறது. பாஜகவின் தமிழக தலைவர்கள் சிரிப்பு வெடி குண்டுகளை அவ்வப்போது வீசுபவர்கள். அதில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பும் ஒன்று. இதை நகைச்சுவை என்று வைத்துக் கொள்ளலாம். ரஜினிகாந்த் நிலைபாட்டுக்கு யார் காரணம் என்று தெரியாது. நண்பர் என்ற முறையில் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவை நான் வரவேற்வேற்கிறேன். நாடாளுமன்ற தேர்தலை போல் சட்டமன்ற தேர்தல் இருக்காது என்று கூற பாஜக ஆருடம் சொல்லக்கூடிய கட்சி அல்ல. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றதே, அதே நிலைதான் வரக்கூடிய தமிழக சட்டமன்ற தேர்தலிலும் இருக்கும்.

Related Stories: