புத்தாண்டு கொண்டாட்டம் சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

புதுச்சோி : புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள்  கூட்டம் அலைமோதியது. புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு  களைகட்டுவது வழக்கம். அன்று ஒரே நாளில் மதுவிற்பனை கோடிக்கணக்கில்  நடைபெறும் என்பதால், ஆண்டின் முதல் நாளிலே அரசுக்கு கலால்மூலம் அதிக  வருவாய் கிடைக்கும். இந்தாண்டு கொரோனா கெடுபிடி காரணமாகவும், கவர்னரின்  எச்சரிக்கை நிமித்தமாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது.  

இதனால் எதிர்பார்த்த வியாபாரமின்றி மதுவிற்பனையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.   அதேவேளையில் சாலையோர விபத்துகள் இந்தாண்டு வெகுவாக குறைந்தன. நகரில்  ஒன்றிரண்டு சிறிய விபத்துகள் மட்டுமே நடந்தன. 4 டிராபிக் காவல் சரகத்திலும்  புத்தாண்டு விபத்து தொடர்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை.கூட்டம்,  அதிகளவில் கூடாமல் தடுத்து சாதூர்யமாக தங்களது பணியை போலீசார்  நிறைவேற்றினர். ஆங்காங்கே குடிபோதையில் ரகளை செய்தவர்களையும், பெண்களை கேலி-  கிண்டல் செய்தவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

புத்தாண்டு  கொண்டாட்டத்துக்கு வந்திருந்த வெளிமாநில பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு  படையெடுத்தனர். இதனால் சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி படகு குழாம்,  செல்லிப்பட்டு ஆற்றங்கரைகளில் கூட்டம் அலைமோதியது. இந்தாண்டு  சுற்றுலா தலங்களுக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. சுண்ணாம்பாறு படகு குழாமிற்கு சென்றவர்கள், படகுசவாரி சென்று கடற்கரையில்  இறங்கியதும் அங்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விருப்பமுள்ளவர்கள்  கொரோனா பரிசோதனை  செய்து கொண்டனர்.

Related Stories: