பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறது : பாஜ முத்தரசன் குற்றச்சாட்டு

தர்மபுரி,:இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தர்மபுரியில் அளித்த பேட்டி:

உடல்நலத்தை கருத்தில் கொண்டு, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித் துள்ளார். இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை. உடல்நலம்தான் முக்கியம். மிகுந்த உடல்நலத்தோடு, அவர் நீண்டகாலம் வாழவேண்டும்.

பாஜ பல்வேறு மாநிலங்களில் குளறுபடி மற்றும் மோதலை ஏற்படுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பாஜ பிரித்தாளும் சாகசங்களை செயல்படுத்த முயற்சிக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.

தஞ்சையில் விவசாயிகள் மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா பரவும் என்ற காரணத்தால் தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முதல்வர் பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்டம் கூடுகிறது. அங்கு கொரோனா பரவாதா? மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்று தெரிந்தும், முதல்வர் அதனை எதிர்க்கவில்லை. சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைக்கும் விவகாரத்தில், 92 சதவீத விவசாயிகள் நிலம் கொடுக்க முன்வந்துள்ளார்கள் என்று முதல்வர் கூறியது உண்மை என்றால், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நடிகர் கமல் என்ன நோக்கத்திற்காக கட்சி தொடங்கினார்? என்பதை விளக்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories: