மத்திய பிரதேசத்தில் சாலையில் எருமை சாணம் போட்டதால் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பு!!

போபால் : மத்திய பிரதேசத்தில் சாலையில் எருமை சாணம் போட்டதால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல நகரங்களில் மாடுகள் வளர்ப்பது பெரும் சிக்கலான விஷயமாக மாறியுள்ளது. மாடுகளை கட்டி வைக்க இடம் பற்றாக்குறை போன்றவற்றால் பலர் மாடுகளை சாலைகளிலேயே விட்டுவிடுகின்றனர். மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாடுகளை பராமரிக்க அரசு பல்வேறு முயற்சிகளையும், மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாநகராட்சி பகுதியின் பிரதான சாலையில் மாடுகள் சில சாணம் போட்டுள்ளன.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மாநகராட்சி நிர்வாகம், மாட்டின் உரிமையாளரான பீட்டல் சிங் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி நிறுவனத்தின் அதிகாரி மணீஷ் கனாஜியா கூறுகையில், “நகரின் பல்வேறு இடங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளில் கழிவுகளை கொட்டுவோருக்கும் அபராதம் விதிக்கிறோம். அது மட்டுமல்லாது பொதுமக்களுக்கு தூய்மை பற்றியும் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், என்றார். சமீபத்தில் பிரபலமான குவாலியர் கோட்டையை சமூக அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் உதவியுடன்  நகராட்சி நிறுவனம் சுத்தம் செய்தது. மேலும் கோட்டைக்கு பொருட்களைக் கொண்டு வருவதற்கு மக்கள் பாலிதீனைப் பயன்படுத்தக்கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: