ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அண்ணாநகர், எட்டிகுளம் மக்களுக்கு பட்டா: வார்டு சபை கூட்டத்தில் வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக பேரூராட்சி வார்டு சபை கூட்டத்தில் அண்ணாநகர், எட்டிகுளம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தினர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக சார்பில், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என 11, 12, 13 ஆகிய வார்டுகளில் திமுக வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. இதில், பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். மகளிரணி சாந்தி, கவுஸ்பாஷா, துரைராணி முன்னிலை வகித்தனர். தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர்கள் சாதிக்பாஷா, சந்தோஷ் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் அளவி, தொண்டரணி அமைப்பாளர் முத்துக்குமார், மீனவரணி துணை அமைப்பாளர் அசோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். பெண்கள் கூறியதாவது, ‘ஊத்துக்கோட்டை பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் கடந்த 40 வருடங்களாக வசித்து வருபவர்களுக்கும், எட்டிகுளம் பகுதியில் 20 குடும்பங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். மேலும் ரேஷன் கார்டு, மின்சார வசதி இல்லை. தெரு விளக்குகள் எரிவது இல்லை’ என கூறினர்.

Related Stories: