மான் கறியுடன் பிடிபட்ட 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

வால்பாறை: வால்பாறை அடுத்து உள்ள வறட்டுப்பாறை எஸ்டேட்டில் சிலர் மான்கறி வைத்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் தலைமையில், வனவர்கள் முனியாண்டி, சக்திவேல், மற்றும் வனப்பணியாளர்கள் வறட்டுப்பாறை எஸ்டேட்டில் நேற்று ஆய்வு செய்து மான்கறி மற்றும் கத்தி உள்ளிட்டபொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், செந்நாய் வேட்டையில் சிக்கிய கடமானின் எஞ்சிய மாமிசம் தான் இது என உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து, புலிகள் காப்பக துணைக்கள இயக்குநர் சேவியர் உத்திரவின் பேரில் வறட்டுப்பாறை எஸ்டேட்டை சேர்ந்த செல்வராஜ் (40), சின்னசாமி(60), ஏழுமலை(38), ராம்குமார்(37) ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Related Stories: