திருச்சியில் பயங்கர தீ விபத்து: சுவிட்ச் போர்டு தயாரிக்கும் கம்பெனி எரிந்து சாம்பல்

திருச்சி: திருச்சியில் பயங்கர தீ விபத்தில் சுவிட்ச் போர்டு தயாரிக்கும் கம்பெனி எரிந்து சாம்பலானது. தீ விபத்தில் ரூ.40 லட்சம் பொருட்கள் சேதமானது. திருச்சி சங்கிலியாண்டபுரம் ராஜு நாயுடு ெதருவை சேர்ந்தவர்கள் மணிகண்டன், கார்த்திக், முருகேசன். இவர்கள், அதே பகுதியில் மின்சார ஸ்விட்ச் போர்டு தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளனர். ஏராளமான மரப்பலகைகள், தளவாட பொருட்கள் இருந்தது. வழக்கம் போல் நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்து 3பேரும் கம்பெனியை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஸ்விட்ச் போர்டு கம்பெனியிலிருந்து புகை வந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் மில்கியூராஜா தலைமையில் 3தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கம்ெபனி முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள மரக்கட்டைகள், மரப்பலகைகள், தளவாட பொருட்கள் எரிந்து சாம்பலானது. முதல்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: