தொழிலாளர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்: மாஜி அமைச்சர் ஆர்வி தேஷ்பாண்டே வலியுறுத்தல்

பெங்களூரு: நரசாபுரா தொழிலாளர் பிரச்னைக்கு மாநில அரசு உடனடியாக சுமூக தீர்வு காண வேண்டும் என மாஜி அமைச்சர் ஆர்வி தேஷ்பாண்டே கூறினார். கோலார், நரசாபுராவில் ஐபோன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜி தொழிற்துறை அமைச்சர் ஆர்வி தேஷ்பாண்டே கூறியதாவது:

கர்நாடக மாநிலத்தில் வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள்  செயல்படுகின்றன. அதுபோல் ஐபோன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை கோலாரில் அமைந்துள்ளது நமது மாநிலத்திற்கு பெருமை அளிப்பதாகும். கர்நாடக மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு உகந்த காலநிலை மட்டும் இன்றி திறன் மிகுந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அதே நேரம்  கோலாரில் நடந்த சம்பவம் எதிர்மறையான நிகழ்வுகளை ஏற்படுத்திவிடக்கூடாது.

தொழிலாளர்கள் பிரச்னை உடனடியாக தீர்த்து வைக்கப்படவேண்டும். அத்துடன் இது போன்ற பிரச்னை மறுபடியும் ஏற்படாத வகையில் இவ்விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சம்பளம் உள்ளிட்ட பிரச்னை இருந்தால் தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசிடம் அமைதியான முறையில் தெரிவிக்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்றார். கர்நாடக மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு உகந்த காலநிலை மட்டும் இன்றி திறன் மிகுந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.

Related Stories: