கிராம பஞ்சாயத்து தேர்தலில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் சத்தியபாமா எச்சரிக்கை

கோலார்:கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சத்தியபாமா எச்சரிக்கை விடுத்தார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது: கிராம பஞ்சாயத்து பொது தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமல் நடத்தப்படும். இதனால், வேட்பாளர்களுக்கு வெளிப்படையான சின்னங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். மேலும், போட்டியிட்டுள்ளவர்களுக்கு விதிமுறை மீறல் ஆகாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் மேடையில் கட்சி கொடி, பேனர் பயன்படுத்தக்கூடாது. போட்டியிடும் வேட்பாளர்களை தங்களுடைய கட்சி அல்லது ஆதரவு வேட்பாளர் என அறிமுகப்படுத்துவது மற்றும் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்களர்களிடம் கேட்கக்கூடாது.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்அரசியல் தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சி சின்னம் இருக்கும் கைப்பிரதிகளை அச்சடிப்பது அல்லது வினியோகிக்கக்கூடாது.

மேலும், தொலைகாட்சிகள், பத்திரிகைகளில் அரசியல் கட்சி தலைவர் படம் மற்றும் கட்சி சின்னங்கள் பயன்படுத்தி வேட்பாளர்கள் விளம்பரம் செய்யக்கூடாது. இதை வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக தெரியவந்தால் தேர்தல் பிரசார பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். அதேபோல், அது போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். போட்டியிடும் வேட்பாளர்களை தங்களுடைய  கட்சி அல்லது ஆதரவு வேட்பாளர் என அறிமுகப்படுத்துவது மற்றும் அவருக்கு  ஆதரவாக வாக்களிக்க வாக்களர்களிடம் கேட்கக்கூடாது

Related Stories: