சொல்லிட்டாங்க...

கொரோனா தடுப்பூசி குறித்த புரளிகள் தேச விரோதமானவை, மனித குலத்திற்கே விரோதமானவை. - பிரதமர் நரேந்திர மோடி

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மைசூரில் உள்ள ‘பிபிவி’ பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் பிற்போக்குத்தனமான முடிவை மத்திய பாஜ அரசு கைவிட வேண்டும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கல்வி-வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது காலம்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களை கைதூக்கி விடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிமுறை. இது சலுகை அல்ல, உரிமை.- பாமக நிறுவனர் ராமதாஸ்

மைசூரில் உள்ள நிறுவனத்தின் துறையாக செம்மொழி நிறுவனத்தை மாற்றுவது தமிழுக்கு செய்யப்படும் அவமதிப்பு மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் இன்னொரு துரோகம். - விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories:

>