வகுப்பறையில் டும்டும்டும்... பிளஸ் 1 மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்

திருமலை: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வகுப்பறையில் பிளஸ்1 மாணவிக்கு, சக மாணவன் தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஆந்திராவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு (பிளஸ் 1) படிக்கும் மாணவன் வகுப்பறையிலேயே சக மாணவிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதை மற்றொரு மாணவன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, புகைப்படங்கள் பள்ளி நிர்வாகத்திற்கு சென்றது. இதன்பேரில் திருமணம் செய்து கொண்ட 2 பேரையும், மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றொரு மாணவனையும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>