கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வருவது உறுதி: உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்

மங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மத மாற்ற தடை சட்டம் மற்றும் லவ் ஜிகாத் தடை சட்டம் கொண்டு வருவது உறுதி என்று மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். மங்களூரு மாவட்டம், பணம்பூரில் புதியதாக கட்டியுள்ள காவல் குடியிருப்பு திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தினகர்பாபு, கடலோர மேம்பாட்டு வாரிய தலைவர் மட்டூர் ரத்னாகர் ஹெக்டே, மேற்கு மண்டல போலீஸ் ஐஜிபி தேவஜோதிரே, மாவட்ட போலீஸ் எஸ்பி விஷ்ணுவர்தன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர். முன்னதாக அமைச்சருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது; ``மராத்தி வளர்ச்சி ஆணையம் அமைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கன்னட அமைப்பினர் வரும் 5ம் தேதி மாநில முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தற்போதுள்ள சூழ்நிலையில் இதுபோன்ற போராட்டங்கள் அவசியமில்லை என்பதால், போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அரசின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ேளாம். அதே சமயத்தில் முழு அடைப்பு சமயத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்காமல் காப்பதுடன் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.அமைச்சரவை விஸ்தரிப்பது அல்லது புதியவர்களை சேர்த்து கொள்வது, தற்போது இருப்பவர்களை நீக்குவது உள்ளிட்ட அனைத்து முடிவுகளும் எடுக்கும் அதிகாரம் முதல்வர் எடியூரப்பாவுக்கு உள்ளதால், அதை யாரும் கேள்வி கேட்கமுடியாது.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் மொகலாய மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்து லவ் ஜிகாத் இருப்பதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். அவர் இன்னும் மொகலாயர் காலத்தில் உள்ளார். காலம் மாறிவிட்டதை புரிந்துகொள்ளவில்ைல.மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டம் மற்றும் லவ் ஜிகாத் தடை சட்டம் கொண்டுவருவது உறுதி. இதை எத்தனை சக்திகள் தடுத்தாலும் நிறுத்த மாட்டோம். ஏற்கனவே உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் நகல் பெற்று, மாநில அரசின் சார்பில் வேறு என்னென்ன புதிய அம்சங்கள் சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானித்த பின் சட்டம் அமல்படுத்தப்

படும் என்றார்.

26ல் இருந்து இரவு நேர ஊரடங்கு

மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் இருப்பதால், கோவிட்-19 விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் புத்தாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி முதல் ஒருவாரத்திற்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். புத்தாண்டு முடிந்த பின் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து யோசித்து வருகிறோம். அப்படி திறக்கும் பட்சத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Related Stories: