புதுவையில் மதுவுக்கு கொரோனா வரி கவர்னர் நீட்டிப்பு

புதுச்சேரி: புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி : புதுச்சேரி சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மாநிலம். புதுச்சேரி மாநிலத்தில் மது பிரியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆகவே, கொரோனா வரியை ரத்து செய்ய  வேண்டுமென நானும், அமைச்சர் நமச்சிவாயமும் முடிவு செய்து, கோப்புகளை கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் கவர்னர்  அதிகார துஷ்பிரயோகம் செய்து எங்களது பரிந்துரையை நிராகரித்து, அவர் அந்த கோப்பில் மேலும்  2  மாதத்திற்கு கொரோனா வரியை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இது சட்டத்திற்கும், விதிமுறைகளுக்கும் மீறிய செயலாகும். விதிமுறைகளை மீறி சம்பிரதாயத்தை மீறி, சட்டங்களை மீறி கவர்னர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதன்  ெவளிப்பாடுதான் இது என்றார்.

Related Stories: