கொரோனா பாதிப்பு 95 லட்சமாக உயர்வு: சிகிச்சை பெறுவோர் 5 லட்சம்

புதுடெல்லி: நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:

* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 94.62 லட்சமாக உயர்ந்தது.

* வைரசினால் நேற்று ஒரே நாளில் 482 பேர் பலியானதால், மொத்த பலி 1,37,621 ஆக அதிகரித்தது.

* இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 88 லட்சத்து 89 ஆயிரத்து 585 ஆக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 93.94 சதவீதமாக காணப்படுகிறது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. சிகி்ச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,35,603 ஆக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்றிரவு  95 லட்சத்தை கடந்தது.

Related Stories:

>