தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராகுங்கள்..! மாநில தலைமை செயலாளர்களுக்கு அமைச்சரவை செயலாளர் அறிவுறுத்தல்

புதுடெல்லி: பொதுமக்களுக்கு தடுப்பூசி விநியோகம் செய்ய வசதியாக உள்கட்டமைப்பை ேமம்படுத்த மாநில அரசுகள் தயாராக இருக்க மத்திய அமைச்சரவை செயலாளர் மாநில தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘மத்திய உள்துறை அமைச்சக வழங்கிய அறிவுரைகளை மாநில அரசுகள் தவறாமல் பின்பற்ற வேண்டும். தற்போது கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு ஏற்படுவது மிகவும் குறைந்து வருகிறது. தொற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கு போதுமான சோதனைகள் அவசியம். தொற்றை முன்கூட்டியே கண்டறிவதன் மூலமாக சமூகத்தில் பரவலைக் குறைக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் வரும் 6 ஆம் தேதிக்கு முன்னதாக தலைமைச் செயலாளர்கள் அனைவரும் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும்.

தடுப்பூசி தொடர்பான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், அது தொடர்பான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, தடுப்பூசியை அனைத்து மாநிலத்திற்கும் கொண்டு செல்வது உள்ளிட்ட ஒருங்கிணைப்புகளை செய்வதற்கு தயாராக வேண்டும். குறிப்பிட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களுடன் வெளிப்படையான தகவல் தொடர்பு வசதிகளை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>