டெல்லியில் 10 டிகிரி செல்சியஸ் 10 ஆண்டுக்குப் பின் நடுங்க வைக்கும் குளிர்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வழக்கமாக, நவம்பர் மாதத்தில் கடும் குளிர் நிலவும். ஆனால், இந்தாண்டு சராசரியாக 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அது அடைந்துள்ளது. இதனால், டெல்லிவாசிகள் குளிரால் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் குறைவாகும்.

* டெல்லியில் வழக்கமாக நவம்பரில் மிகவும் குறைந்தப்பட்சமாக 12.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும்.

* கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

* இந்தாண்டில் சராசரியாக இது 10.3 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது.

* கடந்த 23ம் தேதி 6.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு வெப்பநிலை சென்றதால், தலைநகர மக்களை குளிரில் உறைய வைத்தது. இதற்கு முன், 2003ம் ஆண்டில் இதே மாதத்தில் 6.1 டிகிரி செல்சியசாக வெப்பநிலை இருந்தது.

* காற்றும் மோசம்

டெல்லியில் குளிருடன் மோசமான காற்று மாசும் மக்களை மூச்சுத்திணற வைத்து வருகிறது. நேற்று காற்றின் தர குறியீடு என்ற ஏ.க்யூ.ஐ குறியீடு 245 ஆக பதிவானது. நேற்று முன்தினம் இது 231 ஆகவும், வெள்ளிக்கிழமை 137 ஆகவும், வியாழக்கிழமை மிக மோசமாக 413 ஆகவும் பதிவானது.

Related Stories: