கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: வார விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கொடைக்கானலில் திறக்கப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, வட்டக்கானல் அருவி, கோக்கர்ஸ் வாக், பிரையன்ட் பூங்கா ,ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, ஆகிய சுற்றுலா தலங்களில் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கொடைக்கானலில் நேற்று காலை முதல் இதமான சீதோஷ்ணம் நிலவியது. அவ்வப்போது லேசான சாரல் மழையும் தூறியது. இந்த மாறுபட்ட சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

Related Stories:

>