வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி குமரியில் ஏர் கலப்பை பேரணி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைது

மார்த்தாண்டம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஏர் கலப்பை பேரணி நேற்று தொடங்கியது. மார்த்தாண்டம் அருகே மேல்புறம் சந்திப்பில் நேற்று மாலை ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் முதலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விஜயதரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் பிரின்ஸ் எம்எல்ஏ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பலத்த மழையிலும் காங்கிரசார் தடையை மீறி ஏர்கலப்பை பேரணியை தொடங்கினர். போலீசார் பேரிகார்டு வைத்து தடுத்து 50 பெண்கள் உள்பட 300 பேரை கைது செய்தனர்.

முன்னதாக, நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலையில் இருந்து புறப்பட்ட ஏர்கலப்பை பேரணிக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் ராபர்ட் புரூஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய்வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூங்கா அருகே வந்தபோது 200 பேரை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

Related Stories: