புனே, கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரத் பால்கே உடல்நல குறைவால் காலமானார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த பரத் பால்கே, பந்தர்பூர் - மங்கள்வேதா தொகுதியில் இருந்து தேர்வானார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்து வீடு திரும்பினார். எனினும், அதற்கு பின் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.