எஸ்டிஎம்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட ஒப்பந்ததாரருக்கு 4.72 கோடி கூடுதல் பணம்: பாஜ முறைகேடு செய்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒருங்கிணைந்த மாநகராட்சியாக இருந்த போது, 20.17 கோடி மதிப்பில் 100 படுக்கை வசதியுடன் கல்காஜியில் பூர்ணிமா சேத்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் திட்டம் 2005ல் அறிவிக்கப்பட்டது. நிதி நெருக்கடி சுமையால், 9.87 கோடியில் மட்டுமே பணிகளை நிறைவேற்றுவது என திட்டம் பின்னர் 2007ல் மாற்றப்பட்டது. அதையடுத்து 2010ல் திட்டம் ஒருவழியாக தொடங்கப்பட்டது. 2012ம் ஆண்டில் திறப்பு விழா எனும் நிபந்தனையுடன் மருத்துவமனை கட்டும் பணிக்கு தனியார் ஒப்பந்ததாரருக்கு 9.88 கோடி வழங்கப்பட்டது. எனினும் உறுதி அளித்தபடி கட்டுமான பணி நடைபெறவில்லை.இதனிடையே, பணிகள் தாமதமானதை அடுத்தும், பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்ததாலும் திட்ட மதிப்பீட்டை திருத்தம் செய்து எஸ்டிஎம்சியில் (ஒருங்கிணைந்த மாநகராட்சி அப்போது பிரிக்கப்பட்டது) ஒப்பத்தாரர் சமர்ப்பித்தார். திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடாக அவருக்கு 30.96 கோடி வழங்கப்படது.

மேற்படி விவரங்கள் அனைத்தும் மாநகராட்சி தலைமை கணக்கு தணிக்கையாளர் தணிக்கை செய்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது என நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய ஆம் ஆத்மி கட்சி செய்தித்தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ், அந்த தொகை மட்டுமன்றி 4.72 கோடி கூடுதலாக ஒப்பந்ததாரர் பெற்று உள்ளதையும் தணிக்கையாளர் குறிப்பிட்டு இருப்பதாகவும், தணிக்கை அறிக்கை நகல் தன்னிடம் உள்ளது எனவும் அவர் குற்றச்சாட்டு கூறினார். இது குறித்து பரத்வாஜ் மேலும் கூறுகையில், முறைப்படி ஒதுக்கிய நிதியில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மட்டுமன்றி 10 ஆண்டு ஆகியும் சூப்பர் ஸ்பெஷாலிட்ட மருத்துவமனையை பாஜ நிர்வாகத்தால் கட்டி முடித்து மக்களுக்கு அர்ப்பணிக்க முடியவில்லை. ஆனால் ஒப்பந்ததாரருக்கு நிர்ணயித்த தொகையைக் காட்டிலும் கூடுதலாக வழங்க முடிகிறது என அவேசப்பட்டார்.

அது மட்டுமன்றி, பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறோம் என நிருபர்களிடம் பாஜ ஒவ்வொரு முறையும் கூறி வருகிறது. ஆனால் முறைகேடு நடைபெற்று இருப்பது மாநகராட்சி தணிக்கை அறிக்கையிலேயே உண்மையாகி உள்ளது எனவும் கொந்தளித்தார்.

n 20.17 கோடி மதிப்பில் 100 படுக்கை  வசதியுடன் கல்காஜியில் பூர்ணிமா சேத்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை  கட்டும் திட்டம் 2005ல் அறிவிக்கப்பட்டது.

n நிதி நெருக்கடி சுமையால், 9.87  கோடியில் மட்டுமே பணிகளை நிறைவேற்றுவது என 2007ல் திட்டம் மாற்றப்பட்டது.

n 2012ல் திறப்புவிழா என்று கூறி 2010ல் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் திட்ட மதிப்பு உயர்த்தப்பட்டு 30.96 கோடி ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது.

ஆம்ஆத்மி அரசுதான் தாமதத்திற்கு காரணம்

பரத்வாஜின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பாஜ செய்தித்தொடர்பாளர் பிரவீன் சங்கர் கூறுகையில், ‘‘கூடுதலாக தொகை வழங்கவில்லை. மொத்த மதிப்பீடான ₹30.95 கோடியில் 30 கோடிக்கும் குறைவாக வழங்கி உள்ளோம். கூடுதலாக 2 கோடி கேட்டு விவகாரத்தை நீதிமன்றத்துக்கு ஒப்பந்ததாரர் கொண்டு சென்றுள்ளார். கூடுதல் தொகையை நாங்கள் வழங்கி இருந்தால், அவர் ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும். மருத்துவமனை தாமதம் ஆவதற்கு, மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய நிதியை ஆம் ஆத்மி அரசு ஒதுக்காதது தான் காரணம்’’, என சாடினார்.

Related Stories: