மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 1.75 லட்சத்தில் ‘தடுப்பூசி சுற்றுலா’ டிராவல் நிறுவனம் ‘டீஸர்’ வெளியீடு

மும்பை:மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு ெசன்று தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர், ரூ. 1.75 லட்சத்தில் தடுப்பூசி சுற்றுலாவில் பதிவு ெசய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த டிராவல் நிறுவனம், ‘கொரோனா தடுப்பூசி பெற்ற முதல் நபர்களில் ஒருவராக இருங்கள்’ என்ற  தலைப்பில் ஒரு டீஸரை வெளியிட்டது. மேலும், குறிப்பிட்ட வாட்ஸ் அப் எண்ணையும்  வெளியிட்டது. அந்த செய்தியில், ‘அமெரிக்காவிற்கு சென்று கொரோனா தடுப்பூசி முதன்முறையாக போட்டுக் கொள்ள விருப்பம் உள்ளோர் எங்களிடம் தொடர்பு கொள்ளலாம். உங்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி டிசம்பர் 11ம் தேதி வாக்கில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளத

தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர் அமெரிக்காவில் நான்கு நாட்கள் தங்கி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.1.75 லட்சம் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் ‘ஃபைசர்’ தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட சில விவிஐபி வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசி விநியோம் செய்கின்றனர். அந்த பட்டியலில் உங்களை அழைத்து செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். மும்பையில் இருந்து நியூயார்க்குக்கு விமானம் செல்வதால், மூன்று இரவுகள் மற்றும் நான்கு நாட்கள் காலை உணவு மற்றும் ஒரு தடுப்பூசி டோஸ் ஆகிய வசதிகள் செய்து தரப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>