மின் வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்த 69,000 பெட்ரோல் பங்க்கில் ‘இ-சார்ஜ்’ வசதி: நெடுஞ்சாலை துறை அமைச்சர் தகவல்

புதுடெல்லி: மின்சார வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 69,000 பெட்ரோல் பங்க்கில் ‘இ-சார்ஜ்’ வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ‘வாகன சேவைகள் - 2020, மின்சார போக்குவரத்து மாநாடு - 2020, புதிய நடைமுறையில் வாய்ப்புகளை பெறுதல்’ என்னும் காணொலி மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சூழலை உருவாக்க அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. காற்று மாசை குறைப்பதற்கான விரிவான லட்சியத்தை அடைய வாகன உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதமாக குறைத்தது, பேட்டரி விலையை வாகனத்தின் விலையிலிருந்து பிரித்து விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மின் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். சர்வதேச போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் வாகன உற்பத்தித் தொழில் மேம்படுத்தப்படும். மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் சுமார் 69 ஆயிரம் பெட்ரோல் பங்க்கில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யும் ‘கியோஸ்க்’ அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன’ என்றார்.

Related Stories: