காஷ்மீரின் நக்ரோட்டாவில் நடந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்

டெல்லி: காஷ்மீரின் நக்ரோட்டாவில் நடந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ உதவி செய்து வருகின்றனர்.

சில நேரங்களில் எல்லை அருகில் உள்ள கிராம மக்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டுகளை வீசுவதும் உண்டு. உரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மூன்று பொதுமுக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 4 பேர் உரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தனர். இரண்டு இடங்களில் நடைபெற்ற இதுபோன்ற சம்பவங்களில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உரி செக்டாரில் இருவரும், குரேஸ் செக்டாரில் ஒரு வீரரும் வீரமரணம் அடைந்தனர்.

பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து தனது கண்டனத்தை வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: