நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருவிழா; மறுவீடு பட்டின பிரவேசத்துடன் நிறைவு

நெல்லை: நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சுவாமி, அம்பாள் மறுவீடு பட்டின பிரவேச வைபவத்துடன் நிறைவடைந்தது. வரலாற்று பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கடந்த 31ம்தேதி கொடியேற்றத்துடன் உள்  திருவிழாவாக தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் சுவாமி,  அம்பாளுக்கு காலை. மாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார  தீபாராதனை, உள்பிரகாரம் வலம் வருதல் நடைபெற்று வந்தது.

11ம் நாள் விழாவில் பேட்டை சாலையில் அமைந்துள்ள காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. 12ம்தேதி அதிகாலையில் ஆயிரங்கால்  மண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் மூன்று நாட்கள் நடந்தது. இதன்பின்னர் கோயில் உள் மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு மறுவீடு பட்டின பிரவேசம் வைபவம் நேற்று (14ம்தேதி) நடந்தது. இதில் சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்டு பலகாரங்கள் படைத்து சிறப்பு தீபாராதனையுடன் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நிறைவு பெற்றது.

Related Stories: