வேங்கைவையல் குற்றப்பத்திரிகை 1 மாதம் அவகாசம் கேட்கும் சிபிசிஐடி: நீதிமன்றத்தில் மனு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று புதுகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022 டிசம்பர் 25ம் தேதி ஆதிதிராவிடர் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் நடை பெற்று 512 நாட்கள் ஆன நிலையில் குரல் மாதிரி பரிசோதனை, மரபணு பரிசோதனை என பல வகைகளில் சிபிசிஐடி போலீசார் முயற்சித்தும் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீஸ் தரப்பில், மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளியை நெருங்கி விட்டதால் விரைவில் பிடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

The post வேங்கைவையல் குற்றப்பத்திரிகை 1 மாதம் அவகாசம் கேட்கும் சிபிசிஐடி: நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: