மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார் தீபாவளி வாழ்த்து

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் தீபாவளி வாழ்த்து செய்தி: தீபாவளி என்பது அனைவரையும் தாய் தந்தையரை போன்றும், நண்பர்கள், உற்றார் உறவினர் போன்றும் பாவித்து கொண்டாடப்படும் பண்டிகை. ஒருக்கொருவர் கொடுத்து உதவுவது, இருப்பவன் இல்லாதவனுக்கும், இல்லாதவன் இருப்பவனுக்கும் பரிமாறி கொள்வதுதான் பண்டிகை. தருமம் செய்யும்போது சந்தோஷமாக அது நற்பலனை தருகிறது.

வெளிநாட்டு பறவைகள் கூட இந்தியா ஆன்மிக நாடு, நல்லநாடு என்று தெரிந்து இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து, முட்டையிட்டு குஞ்சு பொறித்து தன் இனத்தை பெருக்கி கொண்டு தன் நாடு திரும்புகிறது. ஆனால் நம் நாட்டு பறவைகள் அங்கு செல்வது கிடையாது. ஏனென்றால் அங்கு போனால் அழிவு, வாழ முடியாது என்று தெரியும். அந்த காலத்தில் குடிசை வீடாக இருந்தாலும் நல்ல காற்றோட்டமாகவும், இயற்கையாகவும் இருந்தது. இன்று இயற்கைக்கு புறம்பாக அனைத்து இடத்தையும் வீடு கட்டி காசாக்கிவிட்டான். கழிவு நீரை ஏரியில் கலக்கிறான்.

தீபாவளி என்று சொல்லி பல கருத்துக்களை சொல்கிறேன் என நினைக்கிறீர்களா. அமைதிக்கும், நிம்மதிக்கும் நல்ல கருத்து இருக்கும்போது சிறு குழந்தை கூட “பெய்யென்று சொன்னால் பெய்யும் மழை”. எப்படி நேற்று குளித்தோம் இன்றும் குளிக்கின்றோமோ, நேற்று சாப்பிட்டோம், இன்றும் சாப்பிடுகிறோமோ, அதுபோல மெய்ஞானத்தையும், இயற்கையையும் நாளும் போற்றி பாதுகாக்க வேண்டும். அன்பும், பண்பும், பாசமும் இருக்க வேண்டும். தாய், தந்தையரை வணங்க வேண்டும். உழைத்து வாழ வேண்டும். இயற்கையை போற்றி வணங்கி பாதுகாக்க வேண்டும். மெய்ஞானத்துடன் வாழவேண்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

Related Stories: