மத்திய பிரதேச இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்; பாஜக 17, காங்கிரஸ் 8 இடங்களில் முன்னிலை.!!!

போபால்: நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனைபோல், மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேச இடைத்தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது.

* பாரதிய ஜனதா கட்சி-  17 இடங்களில் முன்னிலை.

* காங்கிரஸ் கட்சி    -  8 இடங்களில் முன்னிலை.

ஏற்கனவே 107 எம்எல்ஏ.க்கள் உள்ள நிலையில், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால், பாஜ.வுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்து விடும். ஆனால் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்க 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். மொத்தமுள்ள 230 இடங்களில் ஒரு இடம் காலியாகி 229 ஆக குறைந்துள்ளதால் பெரும்பான்மைக்கு 115 இடங்கள் தேவை. இருப்பினும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: