புவனேஸ்வர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு மணற்சிற்பம் வடித்து மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பம் மூலம் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் புகைப்படங்களை சிற்பமாக வடித்துள்ள சுதர்சன், ஆங்கிலத்தில் Congratulations USA என்ற எழுத்துக்களை பொறித்துள்ளார். மறு சிற்பத்தின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுதர்சன் பட்நாயக், அமெரிக்க தேர்தல் வெற்றியை வரலாற்று வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக்.