நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவுக்கு கூடுதல் கட்டிடம்: திமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 13 லட்சத்தில் கட்டப்பட்ட  புறநோயாளிகள் பிரிவு கூடுதல் கட்டிடத்தை திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் நேற்று திறந்து வைத்தார். கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி  சாலையோரத்தில், மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, 30 படுக்கை அறை கொண்ட நவீன பிரசவ வார்டு,  புறநோயாளிகள் பிரிவு, சித்தா மருத்துவ பிரிவு உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி மற்றும் 30க்கும் மேற்பட்ட  கிராம மக்கள் பயனடைகின்றனர்.

மேலும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கு 25 கிமீ தூரத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய  நிலை உள்ளது. இதனால், புற நோயாளிகள் பிரிவுக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி  மதுசூதனனிடம், மருத்துவமனை நிர்வாகம் சார்பில்   கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 13 லட்சம் ஒதுக்கீடு  செய்து, கூடுதல் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக்,   பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் கே.பி.ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் பிரியா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திமுக  தலைமை பொதுக்குழு உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ கலந்து கொண்டு. புறநோயாளிகள் பிரிவு கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார்.  இதில், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சதீஷ்குமார், பத்மநாபன், அப்துல்காதர், ஏ.எஸ்.தரணி, ரவி, நிர்வாகிகள் என்.கோகுலநாதன், ஜான்சிராணி  டிஸ்கோ கணேசன், ஜெமினி ஜெகன், டாக்டர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் சதீஷ், மேற்பார்வையாளர் சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: