குஜராத்தில் ஒற்றுமை வணிக வளாகம், குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்காவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!!

அகமதாபாத் : குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தின் கெவாடியாவில் (ஏக்தா மால்) ஒற்றுமை வணிக வளாகம் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்காவை திறந்து வைத்தார்.

ஒற்றுமை வணிக வளாகம் (ஏக்தா மால்)

35000 சதுர அடி பரப்பில் விரிந்துள்ள இந்த வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும் இந்தியா முழுவதையும் சேர்ந்த பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடையாளச் சின்னமாக திகழும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் குறிக்கும் 20 அரங்குகள் இந்த வளாகத்தில் உள்ளன. 110 நாட்களில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது.

குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா

35000 சதுர அடி பரப்பில் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து பூங்கா உலகிலேயே முதலாவதாக இவ்வகை தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கும். பூங்காவைச் சுற்றி ஊட்டச்சத்து ரயில் ஓடும். ‘ பால்சாகா கிருகம்’, ‘ பயோனகாரி’, ‘அன்னபூர்னா’, ‘போஷன் புரான்’, ‘ஸ்வஸ்தா பாரதம்’ என்னும் பெயர்களில் கருப்பொருள் சார்ந்த ரயில் நிலையங்கள் வழியாக அந்த ரயில் செல்லும். கண்ணாடி பிரமை, ஐம்பரிமாண மெய்நிகர் அரங்கு, பிரம்மாண்ட மெய்நிகர் விளையாட்டுகள் போன்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு கேளிக்கைகள் இதில் இடம்பெறும். இந்த நிலையில் இந்த பூங்காவை திறந்து வைத்த பிரதமர் மோடி, ஊட்டச்சத்து ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

Related Stories:

>